கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி சாலையில் ஒரு தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் பெண்கள் விடுதியில் தங்கி பிரியா என்ற பெண் செவிலியராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் பிரியாவும் கன்னியாகுமரியைச் சேர்ந்த சுஜித் என்பவரும் காதலித்து வந்தனர். சமீப காலமாக சுஜித்தின் நடவடிக்கைகள் பிடிக்காததால் பிரியா அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால் சுஜித் பெண்கள் விடுதிக்குள் அனுமதி இன்றி நுழைய முயன்றார்.
அப்போது பணியில் இருந்த விடுதி காவலர் சுஜத்தை தடுத்து நிறுத்தினார். ஆனாலும் சுஜித் காவலரை மீறி உள்ளே சென்று பிரியாவின் கழுத்தை நிறுத்து கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றார். சுஜித்திடமிருந்து தப்பிக்க முயன்ற போது பிரியாவின் கைகளில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதற்கிடையே மருத்துவமனை காவலர்கள் விரைந்து வந்து சுஜித்தை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சுஜித்தை கைது செய்தனர்.