ஏடிஎம்-இல் பணம் எடுக்கப்போறீங்களா.. ரிசர்வ் வங்கி வைத்துள்ள புது செக்!
ET Tamil February 07, 2025 03:48 PM
இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களின்படி, தற்போது வங்கியின் ஏடிஎம்-இல் இருந்து ஒரு மாதத்திற்கு இலவசமாக எத்தனை முறை பணம் எடுக்கலாம் என்பது குறித்து புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.அந்த வழிகாட்டுதல்களின்படி ஒரு மாதத்திற்கு ஐந்துமுறைக்குமேல் வங்கி ஏடிம் மூலம் இலவசமாக பணம் எடுக்கலாம். அதற்குமேல் பணம் எடுக்கும்பொழுது வங்கிகள் வசூலிக்ககூடிய ஏடிஎம் கட்டணங்கள், ஏடிஎம் பரிமாற்றக் கட்டணங்களையும் உயர்த்த இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) திட்டமிட்டுள்ளதாக பிப்ரவரி 4 அன்று பிசினஸ் லைன் செய்தி தரவுகள் செய்தி வெளியிட்டுள்ளன.அதனால் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மூலம் பணம் எடுத்தால் அதிக பணம் செலுத்த வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்படலாம். ஏற்கனவே 5 முறைக்குமேல் இலவச பரிவர்த்தனைகள் முடிந்தால், அடுத்து பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும் ரூ.21 வரை வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஏடிஎம்மில் பேலன்ஸ் செக் செய்வது போன்ற பணமில்லாத ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.6 கட்டணம் வசூலிக்கப்படுகிறது மக்கள் அதற்கே அதிர்ப்தியில் இருக்கின்றனர். இந்நிலையில் ஐந்து இலவச லிமிட்க்குப் பிறகு எடுக்கப்படும் ஒவ்வொரு அதிகபட்ச ரொக்கப் பரிவர்த்தனைக்கான கட்டணத்தை ரூ.21 இருந்து ரூ.22 ஆக உயர்த்த இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) பரிந்துரைத்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.இந்த கட்டண உயர்வு தொடர்பாக தொழில்துறையினருடன் கலந்தாலோசித்த பிறகு, பணம் செலுத்தும் ஒழுங்குமுறை ஆணையமான NPCI, ATM பரிமாற்றக் கட்டணத்தை தற்போதைய ரூ.17 இல் இருந்து ரூ.19 ஆகவும், ரொக்கம் அல்லாத பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை ரூ.6 இல் இருந்து ரூ.7 ஆக உயர்த்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக் செய்தி தரவுகள் கூறுகின்றன. மேலும் NPCI இன் மெட்ரோ மற்றும் மெட்ரோ அல்லாத பகுதிகளுக்கான கட்டணங்களை அதிகரிக்கும் திட்டத்தை வங்கிகள் மற்றும் வெள்ளை-லேபிள் ஏடிஎம் ஆபரேட்டர்கள் பரிந்துரைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இந்த செய்தி குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கைகள் இன்னும் வெளியாகவில்லை.
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.