ஆனால் தற்போதோ நடுத்தர வர்க்க மக்களால் தங்கத்தை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் 2025ஆம் ஆண்டு தொடக்கமே நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் ஆண்டாக மாறியுள்ளது.
பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கலான அன்று தங்கம் விலை முதல் முறையாக 62 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தை தொட்டது. நேற்று முன்தினம் தங்கம் விலை ஒரு சவரன் 63ஆயிரத்தை கடந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று கிராம் ஒன்றுக்கு 25 ரூபாய் அதிகரித்து 7930 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து 63ஆயிரத்து 430 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 8,651-க்கும், ஒரு சவரன் ரூ. 69,208-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி ரூ. 107-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,07,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.