அப்படி போடு..! தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இனி இந்த பொருட்களும் கிடைக்கும்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!
SeithiSolai Tamil February 07, 2025 04:48 PM

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக அரிசி,பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் பொதுமக்களுக்கும் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறுகிறார்கள். சமீபத்தில் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கும் கோதுமையின் அளவை உயர்த்தியதால் இனி அரிசிக்கு பதிலாக மக்கள் கோதுமையை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நீலகிரிமற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் அரிசிக்கு பதிலாக கேழ்வரகு உள்ளிட்ட சிறு தானியங்கள் ரேஷன் கடைகளில் வழங்கும் முறை நடைமுறையில் இருக்கிறது. இது தற்போது தமிழகம் முழுவதும் விரைவில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் சக்கராபாணி தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கம்பு, திணை,சாமை மற்றும் கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.