ஊழியர்களுக்கு ரூ.14.5 கோடி போனஸ் கொடுத்து இன்ப அதிர்ச்சி தந்த கோவை கோ நிறுவனம்!
ET Tamil February 07, 2025 06:48 PM
![](https://shengbo-xjp.oss-ap-southeast-1.aliyuncs.com/Upload/File/2025/02/07/1848372748.jpg)
கோவை மற்றும் இங்கிலாந்தை தளமாகக் கொண்ட Saas மென்பொருள் நிறுவனமான kovai.co தனது 140 ஊழியர்களுக்கு சுமார் ரூ.14.2 கோடி போனஸ் தொகையை பிரித்து வழங்குவதாக அறிவித்து நிறுவன ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.இது ஏன் இவ்வளவு பெரிய விஷயமாக உள்ளது என்றால் மைக்ரோசாஃப்ட் போன்ற பெரிய பெரிய நிறுவனங்கள் தொடங்கி சமீபத்தில் கோவையைச் சேர்ந்த ஒரு சாஃப்ட்வேர் நிறுவனம் முன்னறிவிப்புகள் ஏதுமே இன்றி அதன் மொத்த ஊழியர்களையும் காரணமே சொல்லாமல் வேலையை விட்டு தூக்குவதாக அறிவித்த செய்திகள் தொடர்ந்து ஐடி ஊழியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து வந்தன.இந்த மாதிரியான சூழ்நிலையில் கோவையைச் சேர்ந்த ஒரு Saas சாஃப்ட்வேட் ஸ்டார்ட் அப் நிறுவனமான kovai.co இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டது ஐடி ஊழியர்களுக்கிடையே பெரிய வரவேற்பையும் பாரட்டையும் பெற்றுள்ளது.Together We Grow - என்ற பெயருடன் இந்த போனஸ் அறிவிப்பை நிறுவனம் வெளியிட்டுள்ளது மற்றொரு சிறப்பு. இத்திட்டத்தின்கீழ் டிசம்பர் 31, 2022 அன்று அல்லது அதற்கு முன்னதாக நிறுவனத்தில் சேர்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் மூன்றாண்டு பணி முடிவில் மொத்த சம்பளத்தில் 50 சதவீதம் போனஸாக பெறுவார்கள் என நிறுவனம் தெரிவித்துள்ளது.ஊழியர்களுடன் நிறுவனத்தின் லாபத்தை பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 80 ஊழியர்கள் ஜனவரி 31 ஆம் தேதி சம்பளத்துடன் ஒரு பகுதியாக போனஸ் பெற்றுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.