நெல்லை மாவட்டத்திற்கு என்னென்ன அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் தகவல்..!
Webdunia Tamil February 07, 2025 10:48 PM

நெல்லை மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில் அவர் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்புகள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்.

பாண்டியர் ஆட்சியாக இருந்தாலும், சோழர் ஆட்சியாக இருந்தாலும், விஜயநகர ஆட்சியாக இருந்தாலும், பிரிட்டிஷ் ஆட்சியாக இருந்தாலும், எந்த ஆட்சியாக இருந்தாலும், அதில் மிக முக்கியமான நகரமாக இருந்த ஊர் நம்முடைய திருநெல்வேலி!

இந்தியாவே அடிமைப்பட்டு நெளிந்துக்கொண்டு இருந்தபோது, ஆங்கிலேயருக்கு எதிராக ‘புரட்சி பூபாளம்’ பாடிய மாவீரன் காத்தப்ப பூலித்தேவன் பிறந்த மண், இந்த நெல்லை மண்! ஓராண்டு, ஈராண்டு அல்ல, 17 ஆண்டுகள் வெள்ளையருக்கு எதிராக படை நடத்திய பாளையக்காரர்தான் பூலித்தேவன்!

அந்தப் பூலித்தேவனுக்கு ‘நெல்கட்டும்செவல்’-இல் நினைவு மண்டபம் அமைத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. நெல்லையின் அடையாளங்களில் முக்கியமானது, ஏழாம் நூற்றாண்டில், “நின்றசீர் நெடுமாறப் பாண்டியரால்” கட்டப்பட்ட நெல்லையப்பர் கோயில். இப்படி பாரம்பரியம் மிக்க கோயிலை, 700 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பித்து, திருப்பணிகள் செய்தவர் கருணாநிதி.

திமுக ஆட்சியில்தான் நெல்லையப்பர் கோயிலில் பூட்டிக்கிடந்த மேற்கு, வடக்கு, தெற்கு வாசல்கள் திறக்கப்பட்டது. அதேபோல, வரும் நவம்பருக்குள் கோயிலின் வெள்ளித்தேர் ஓடும்.

பொருநை அருங்காட்சியகப் பணிகளும் 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் மாதத்திற்குள், பணிகள் முடிவு பெற இருக்கிறது.

தாமிரபரணி கருமேனியாறு, நம்பியாறு, உபரி நதிநீர் இணைப்புத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தாழையூத்து முதல் ‘கொங்கந்தான் பாறை விலக்கு’ வரை திருநெல்வேலி மாநகருக்கான மேற்குப் புறவழிச்சாலை,அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை, தாமிரபரணி நதியை நீராதாரமாக கொண்டு 605 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள்,களக்காடு நகராட்சி மற்றும் 7 பேரூராட்சிகளில் இருக்கும் குடியிருப்புகளுக்கு 423 கோடியே 13 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் ஆகியவை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 2021-22 முதல் டிசம்பர் 2024 வரை 5 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் 405 கோடியே 68 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டு, 115 குடியிருப்பு பகுதிகள் பயன்பெறும் வகையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. திருநெல்வேலி மாநகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம்

முறப்பநாடு கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.மணிமுத்தாறு அணைப்பூங்கா பகுதியில் பல்லுயிர்ப் பூங்கா மற்றும் சாகச சுற்றுலாப் பூங்கா அமைக்கும் பணிகள் பரிசீலனையில் இருக்கிறது.

திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் பகுதியில் புதிய ஐ.டி. பூங்கா வள்ளியூரில் மாவட்ட தலைமை மருத்துவமனைதிருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் ஆய்வகம்

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில், இதயம், நரம்பு, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோய்களுக்கான உயர்சிறப்பு மருத்துவப் பிரிவுஅம்பாசமுத்திரத்தில் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம்

மேலப்பாளையம் அரசு மருத்துவமனையில் தாய் மற்றும் குழந்தை பராமரிப்பு பிரிவு, என்.சி.டி. பிளாக் மற்றும் டயாலிசிஸ் பிரிவு பாளையங்கோட்டை வட்டம், முத்தூர் கிராமத்தில் புதிய சிட்கோ தொழிற்பேட்டைமானூர் வட்டம் மதவக்குறிச்சியில் அரசு கலைக் கல்லூரி

காணி பழங்குடியின மக்களுடைய நீண்டநாள் கோரிக்கையான விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட காரையாறு – சின்னமயிலாறு இடையே, தாமிரபரணி ஆற்றைக் கடக்க, இரும்பு பாலம் என இப்படி பல திட்டப்பணிகள் முடிக்கப்பட்டிருக்கிறது..புதிய அறிவிப்புகள்

திருநெல்வேலி மாவட்டத்தின் எதிர்கால தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, நாங்குநேரி வட்டம், மறுகால்குறிச்சி மற்றும் திருவரமங்கைபுரம் கிராமங்களில், 2 ஆயிரத்து 291 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் தொழில்பூங்கா அமைக்கப்படும். அதுமட்டுமல்ல, மூலக்கரைப்பட்டி பகுதியில் இருக்கும் ஆயிரத்து 200 ஏக்கர் தரிசு நிலங்களில் மேலும் ஒரு புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும்.

திருநெல்வேலி மாநகரத்தில், மதுரை குமரி சாலையில், பாளையங்கோட்டை பேருந்து நிலையம் மற்றும் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் இடையே குலவணிகர் புரத்தில் இருக்கும் இரயில்வே கடவுப்பாதைக்கு மாற்றாக, புதிய ஒய் வடிவ ரயில்வே மேம்பாலம் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

திருநெல்வேலி மாநகராட்சியில், புதிய கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, அதிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை சிப்காட் கங்கைகொண்டான் தொழிற்சாலைகளுக்கும், மற்ற தொழில் பூங்காக்களுக்கும் பயன்படுத்த திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம், தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை முற்றிலும் தடுக்கவும் தொழிற்சாலை தேவைகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீரை பயன்படுத்தவும் வழிவகை ஏற்படும்.

பாளையங்கோட்டை அம்பாசமுத்திரம் சாலை மேலப்பாளையம் பகுதியில், 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நெடுஞ்சாலைத்துறை மூலம் நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்படும். அம்பாசமுத்திரம் வட்டம், அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கான பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

மீனவப் பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக திருநெல்வேலி மாவட்ட கடற்கரைப் பகுதியில், கடல்பொருட்கள் மதிப்புக் கூட்டல் மையம் மற்றும் உற்பத்தியாளர் நிறுவனம் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும். இப்போது அறிவித்த திட்டங்களுக்கு எல்லாம், விரைவில் அரசாணை வெளியிடப்பட்டு பணிகள் தொடங்கும்" இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.