vidamuyarchi: 'கோட்'டை நெருங்காத விடாமுயற்சி... முதல்நாள் வசூல்... இத்தனை கோடியா?
CineReporters Tamil February 07, 2025 06:48 PM

மகிழ்திருமேனியின் இயக்கத்தில் ஹாலிவுட் லெவல்ல அஜீத் நடிக்க எடுக்கப்பட்ட படம் விடாமுயற்சி என்றார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜீத் படம் என்பதால் நேற்று பெரும் ஆரவாரத்துடன் வெளியானது. அஜர்பைஜானில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் அவருடன் இணைந்து திரிஷா, அர்ஜூன், ஆரவ் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தில் பிஜிஎம் வேற லெவல். பின்னணி இசையும், பாடல்களும் சூப்பர்.

கலவையான விமர்சனங்கள்: இப்படி இருக்க படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளன. இந்தப் படத்தில் எதிர்பார்த்த அளவு ஆக்ஷன் இல்லை. ரொம்ப நேரம் பேசிக்கொண்டே இருக்கிறார்கள் என்றும் சில ரசிகர்கள் நெகடிவ்வாக தெரிவித்தனர்.

ஆக்ஷன் காட்சிகள்: அதே போல அஜீத் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். படத்தில் அஜீத் இளமையான லுக்குடன் அசத்தியுள்ளார். செகண்ட் ஆப்ல அவரது ஆக்ஷன் காட்சிகள் அதகளப்படுத்துகின்றன. அதனால் படம் மெகா ஹிட்டாகும் என்றனர். அந்தவகையில் படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகி உள்ளது. என்னன்னு பார்ப்போம்.


அஜர்பைஜான்: கோட் படத்தின் முதல் நாள் வசூல் இந்திய அளவில் 43 கோடியாக இருந்தது. ஆனால் விடாமுயற்சி 22 கோடியாகவே உள்ளது. வரும் நாள்களில் சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் வசூலானது கணிசமாக உயர வாய்ப்புள்ளது. ஓம்.பிரகாஷின் ஒளிப்பதிவு அருமை. அஜர்பைஜான் காட்சிகளை அருமையாகப் படமாக்கி உள்ளார்.

கணிசமான வசூல்: கோட் படத்தின் முதல் நாள் வசூல் இந்திய அளவில் 43 கோடியாக இருந்தது. ஆனால் விடாமுயற்சி உலகம் முழுவதும் 40 கோடி என்றும், தமிழகத்தில் மட்டும் 30 கோடி என்றும் சொல்லப்படுகிறது. அதே நேரம் விஜய் நடித்த கோட் படத்தின் முதல் நாள் வசூல் தமிழக அளவில் 38.3 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அப்படி என்றால் இந்திய அளவில் 32 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்கூட்டி எடுத்த கணக்கெடுப்பின்படி முதல் நாள் வசூல் 22 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. வரும் நாள்களில் சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் வசூலானது கணிசமாக உயர வாய்ப்புள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.