“அவளை அனுப்பி வை…” வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண்ணை குத்தி கொன்ற மருமகன்….. அதிர வைக்கும் பின்னணி….!!
SeithiSolai Tamil February 07, 2025 09:48 PM

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் அய்யா பிள்ளை தோட்டத்தில் தனலட்சுமி என்பவர் வசித்து வந்தார். தனலட்சுமியின் சகோதரி மகள் தமிழ்ச்செல்வி அதே தெருவில் வசித்து வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்செல்வியும் காளிமுத்து என்பவரும் பேஸ்புக் மூலம் நண்பர்களாகி காதலித்து வந்தனர். கடந்த ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் தமிழ் செல்விக்கும் காளிமுத்துவக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் தமிழ்ச்செல்வியின் நடத்தை மீது சந்தேகப்பட்ட காளிமுத்து தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். மேலும் கோபத்தை காளிமுத்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்று விட்டார்.

தமிழ்செல்வியும் தனது கணவரை தேடவில்லை. கடந்த இரண்டு நாட்களாக காளிமுத்து தமிழ்செல்வியின் வீட்டருகே வந்து சென்றுள்ளார். தனது வீட்டில் இருந்தால் காளிமுத்து வந்து தகராறு செய்வார் என அச்சப்பட்ட தமிழ்ச்செல்வி தனது சித்தி தனலட்சுமி வீட்டில் இருந்தார். நேற்று முன்தினம் தனலட்சுமி தனது வீட்டு வாசலைப் பெருக்கி சுத்தம் செய்து கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காளிமுத்து தமிழ்செல்வியை தன்னுடன் அனுப்புமாறு தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்று காளிமுத்து தனலட்சுமி கத்தியால் குத்தி கொலை செய்தார். ரொம்ப வேகத்திற்கு சென்று பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் காளிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.