பெற்றோர்களே உஷார்... முதலிரவு முடிந்த 4வது நாளில் நகை, பணத்துடன் எஸ்கேப்பான மனைவி!
Dinamaalai February 08, 2025 12:48 AM

தங்களது மகனுக்கோ, மகளுக்கோ வரன் பார்க்கும் பெற்றோர்களே உஷாராக இருங்க. புற்றீசல் போல முளைத்து விட்ட தரகர்கள் மூலமாக நடைபெறுகிற பல திருமணங்கள் பிரச்சனைகளில் முடிகின்றன. பல இடங்களில் லட்சங்களில் தரகு தொகை வாங்கும் தரகர்கள், முழுவதுமாக சரிப்பார்க்காமலேயே யாரோ ஒரு பெண்ணையோ, பையனையோ தங்களுக்கு கிடைக்கப் போகும் தொகைக்காக கஷ்டப்பட்டு கல்யாண சந்தையில் கரையேற்றுகிறார்கள். இந்த விஷயத்தில் விழிப்புணர்வுடன் இருங்க. முழுக்க விசாரித்த பின்னரே திருமணத்தை முடிவு பண்ணுங்க. 

இமாச்சலப் பிரதேசத்தின் ஹமிர்பூர் மாவட்டத்தில் சகி என்ற ஒரு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ஜிதேஷ் சர்மா என்ற இளைஞன் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு சில நாட்களுக்குப் பிறகு, திருமண வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்று கனவு கண்ட புதுமாப்பிள்ளைக்கு ஒரு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது.

அதாவது, திருமணத்திற்கு சில நாட்களுக்குப் பிறகு, அவரது மனைவி பணம் மற்றும் நகைகளுடன் ஓடிவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த புதுமாப்பிள்ளை காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

புகாரில், அவர் கூறியதாவது, பால்தேவ் சர்மா என்ற தரகர் மூலம் பபிதா என்ற பெண்ணை நான் சந்தித்தேன். திருமணத்திற்காக பால்தேவ் ரூ. 1.50 லட்சம் கமிஷன் வாங்கினார். ஏற்பாடு செய்யப்பட்டபடி, டிசம்பர் 13ம் தேதி கோவிலில் பபிதாவை திருமணம் செய்து கொண்டேன்.

பெண்ணிடம் பிறப்புச் சான்றிதழ் இல்லாததால், பதிவு திருமணம் செய்ய முடியாமல் பெரியவர்கள் முன்னிலையில் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டேன். திருமணம் முடிந்த சில நாட்களுக்குப் பிறகு, பபிதா தனது தாயார் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அவரை கவனித்துக் கொள்வதாகவும் கூறி விட்டு வீட்டிலிருந்து வெளியேறினார்.

2 நாட்களுக்குப் பிறகும் அவள் திரும்பி வரவில்லை. அவரை செல்போனில் தொடர்பு கொண்ட போதும் அழைப்புகளுக்கும் பதிலளிக்கவில்லை. என் வீட்டிலிருந்து பணம் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு அவர் என்னை ஏமாற்றியது தெரிய வந்தது. தரகர் பல்தேவ் சர்மாவும் எனது அழைப்புகளை ஏற்க மறுக்கிறார். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ஜிதேஷ் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.