கள்ளக்குறிச்சி: `தனியார் பள்ளி கலவர வழக்கில் மாணவின் தாய் குற்றவாளி' - குற்றப்பத்திரிகை தாக்கல்
Vikatan February 08, 2025 02:48 AM

கள்ளக்குறிச்சி, கனியாமூர் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் +2 படித்து வந்த மாணவி, கடந்த 2022 ஜூலை 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அதையடுத்து அது தற்கொலை வழக்காக பதிவுசெய்யப்பட்டது. ஆனால் மாணவியின் மரணத்திற்கு பள்ளி நிர்வாகம்தான் காரணம் என்றும், மாணவி கொலைசெய்யப்பட்டிருக்கிறார் என்றும் கூறி, அந்த தனியார் பள்ளியை சூறையாடினர் பொதுமக்கள். அந்த கலவரத்தில் பள்ளி வளாகத்திற்குள் இருந்த வாகனங்கள் தீ வைக்கப்பட்டு, வகுப்பறைகள் மற்றும் அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

கலவரம் | தனியார் பள்ளி

அந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை செய்து வந்த நிலையில், அதற்கான குற்றப் பத்திரிகையை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக உயிரிழந்த மாணவியின் தாயார் செல்வியும், இரண்டாவது குற்றவாளியாக வி.சி.க-வின் கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் திராவிடமணியும் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.