ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள ஒரு பழைய இரும்புக் கடையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு, அடர் புகை காற்றில் பரவியதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ஐயப்ப நகர் பகுதி அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இந்தப் பகுதியில் ஒரு பழைய இரும்புக் கடை இயங்கி வருகிறது. சமீபத்தில் இந்த இரும்புக் கடைக்கு ஒரு ரசாயன பாய்லர் வந்திருந்தது, கடையின் ஊழியர்கள் அதை இரண்டாக உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக ரசாயன கொள்கலன் தீப்பிடித்தது. இதனால், அங்கிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் தீப்பிடித்து எரிந்ததால், அப்பகுதியில் உள்ள காற்று அடர் புகையால் நிரம்பியது. அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மூச்சுத் திணறலால் அவதிப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.