“1100 பேர் உயிர் பிழைச்சிருக்காங்க” அதுக்காக பிச்சை எடுக்க கூட தயாரா இருக்கேன்… kpy பாலாவின் ஆதங்கம்..!!
SeithiSolai Tamil February 14, 2025 02:48 AM

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கலில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானவர் கேபிஒய் பாலா. இவர் வெள்ளித்திரையில் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் மற்றவர்களுக்கு உதவி செய்வதையே தன்னுடைய முழு நேர வேலையாக வைத்துள்ளார். அவர் மற்றவர்களுக்கு உதவி செய்வதை ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பிரபலங்கள் பாராட்டியுள்ளனர்.

இவர் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார். ஆனால் மறுபக்கம் பல விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். இருந்தாலும் அதையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு அவருடைய சேவை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஆம்புலன்ஸ் கொடுக்கும் போது சாதாரணமாக தான் கொடுத்தேன். மொத்தம் ஐந்து ஆம்புலன்ஸ் கொடுத்தேன். அதுல உயிர் பிழைத்தவர்கள் எண்ணிக்கை 1100. இதுவரைக்கும் 180 குழந்தைகள் பிறந்து இருக்காங்க. இப்படிலாம் பண்ணுனா கண்டிப்பா ஒருநாள் சிக்னல்ல பிச்சை எடுப்பன்னு சொன்னாங்க. நல்லது பண்ண சிக்னல்ல பிச்சை எடுக்க கூட நான் தயாராக இருக்கேன்” என்று கூறியுள்ளார்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.