சீமானுக்கு அடுத்த அதிர்ச்சி! விஜயலட்சுமி மீதான புகார் மீது வரும் 17ம் தேதி தீர்ப்பு
Top Tamil News February 14, 2025 04:48 AM

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்யக்கோரிய வழக்கை வரும் 19ஆம் தேதி விசாரித்து அன்றே உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக, நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கடந்த 2011ம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த 2011ம் ஆண்டு அளித்த புகாரை 2012ஆம் ஆண்டிலேயே திரும்பப் பெற்துக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும்,  விசாரணையின் அடிப்படையிலும், போலீசார் வழக்கை முடித்து வைத்த நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்த போது,  காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யபட்டது. வழக்கை ரத்து செய்வது தொடர்பாக விளக்கம் பெறுவதற்காக நடிகை விஜயலட்சுமி  நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்பிறகு வழக்கு பட்டியலிடப்படவில்லை.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி  ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கு இத்தனை ஆண்டுகளாக நிலுவையில் இருப்பது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு காவல்துறை ஆஜரான வழக்கறிஞர் முகிலன் இது இந்திய தண்டனைச் சட்டம் 376 பிரிவில்  பதிவு செய்யப்பட்ட  (கற்பழிப்பு )வழக்கு என தெரிவித்தார். இதையடுத்து சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர், இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக வேண்டும்  என்பதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதனையடுத்து வழக்கை வரும் 19ஆம் தேதி ஒத்திவைத்த நீதிபதி, அன்றே இந்த வழக்கு விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.