வட இந்தியாவில் பிரபலமான ஸ்நாக்ஸாக இருந்த பானி புரி இன்று தென்னிந்தியாவையும் வசப்படுத்திவிட்டது.
தினமும் இதனைச் சாப்பிடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்தப் பானிபூரி வாழ்க்கை முழுவதும் அன்லிமிடெட் ஆகச் சாப்பிட வேண்டுமா? அதற்காகவே ஒரு கடைக்காரர் ஒரு ஆஃபரை அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரிலிருக்கும் ஒரு பானி பூரி கடையில்தான் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆஃபரின் படி ஒருவர் இந்த பாணி பூரி கடையில் ரூபாய் 99 ஆயிரம் செலுத்தினால் போதும் வாழ்நாள் முழுவதும் அந்த கடையில் அன்லிமிடெட் ஆக பானிபூரி சாப்பிட்டுக் கொள்ளலாம்.
இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியானதை அடுத்து, பலரும் இதற்குப் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
ஒரு சிலர் இது எனது வாழ்நாளுக்கான பணமா அல்லது பானி பூரிக்கான பணமா என்று கேட்டுள்ளனர். ஒரு மனிதர் தன் வாழ்நாளில் ஒரு லட்சம் அளவுக்கா பானி பூரி சாப்பிடுவாரா என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...