தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக சூப்பர் ஸ்டார் திகழ்கிறார். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சமூக அக்கறையுள்ள படமாக உருவான வேட்டையன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து இயக்குனர் ராம்கோபால் வர்மா சர்ச்சையாக பேசியுள்ளார். அதாவது ஸ்லோ மோஷன் மட்டும் இல்லையென்றால் ரஜினியால் சினிமாவில் தாக்குப் பிடிக்க முடியுமா? என்று தெரியவில்லை. அதனால் சாதாரண கதாபாத்திரங்களில் அவரால் நடிக்க முடியாது. ஸ்டார் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க முடியும். ரஜினியை அவருடைய ரசிகர்கள் கடவுளாகவே பார்க்கிறார்கள்” என்று பேசியுள்ளார்.