இந்துஸ்தானி இசையில் புகழ்பெற்ற பழம்பெரும் பாடகர் பிரபாகர் கரேகர். இவருக்கு 80 வயது ஆகும் நிலையில் நேற்று மும்பையில் காலமானார். இவர் ஆல் இந்தியா ரேடியோவில் இசை பயணத்தை தொடங்கிய நிலையில் தன்னுடைய குரலால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார்.
இவர் பிரபலமான பல கலைஞர்களுக்கு குருவாக இருந்தவர். இவர் பாட்டு பாடுவது மட்டுமின்றி இந்துஸ்தானி இசையை சர்வதேச அளவில் எடுத்துச் சென்றவர். மேலும் இவர் கோவா மாநிலத்தில் பிறந்தவர். மேலும் இவருடைய மறைவுக்கு கோவா முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.