தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்ட நிலையில் இவருக்கு திருமணம் ஆகி மாலா (36) என்ற மனைவியும் 11 வயதில் சுஜித் குமார் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் மாலா தன் கணவர் இறந்த பிறகு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கேடிகே தோட்டம் பகுதிக்கு குடி பெயர்ந்தார். அங்கு ஒரு பனியன் கம்பெனியில் அவர் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் மாலா சம்பவ நாளில் தன்னுடைய மகனுக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு பின்னர் அவரும் விஷத்தை குடித்து விட்டார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் மாலா சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் சுஜித் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறான்.மேலும் இது தொடர்பாக திருப்பூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்த தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.