மார்ச் 4ம் தேதி 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை... மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு!
Dinamaalai February 22, 2025 03:48 PM

தமிழகத்தில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு ஏற்கனவே மார்ச் 4ம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளனர்.  இதனைத்தொடர்ந்து தற்போது கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் மார்ச் 4-ம் தேதி விடுமுறை வழங்கப்படும் என தற்போது மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதேபோன்று  பிப்ரவரி 26 ம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.  அதே நேரத்தில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலின் பத்தாம் நாள் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 11ம் தேதியும் உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மொத்தம் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மட்டும் 3 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி,திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் அன்றைய தினம் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் போன்றவைகள் செயல்படாது .

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.