குடிமகன்கள் அதிர்ச்சி... பிப்ரவரி 25 முதல் 3 நாட்கள் மதுபானக் கடைகள் மூடல்!
Dinamaalai February 23, 2025 01:48 AM

 
தெலங்கானா மாநிலத்தில்  சட்ட மேலவைக்கு பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர் தொகுதிகளில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும்.

இதனை முன்னிட்டு  சைபராபாத் போலீஸ் கமிஷனரேட்டில் உள்ள கொல்லூர் மற்றும் ஆர்.சி.புரம் காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட கிளப்புகளில் உள்ள பார்கள் உள்பட உணவகங்களுடன் இணைக்கப்பட்ட ஒயின், கள்ளுக்கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என  சைபராபாத் காவல் துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி பிப்ரவரி 25ம் தேதி மாலை 4 மணி முதல் பிப்ரவரி 27 மாலை 4 மணி வரை  தொடர்ந்து 3 நாட்களுக்கு மதுபானக்கடைகள் மூடப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.