அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கே.எஸ்.ரவிக்குமார், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘டிராகன்’ திரைப்படம், வெளியான முதல் இரண்டு நாட்களிலேயே தனது தயாரிப்பு செலவின் பாதியை எளிதாக தண்டி வசதியுள்ளது.
ஏஜிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மேலும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள டிராகன் திரைப்படம் முதல் நாளான வெள்ளிக்கிழமை, இந்தியாவில் ₹6.5 கோடி, உலகளவில் ₹11 கோடி வசூலித்தது.
இரண்டாவது நாளான இன்று, இந்தியாவில் மட்டும் ₹9 கோடி வசூலிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், முதல் இரண்டு நாட்களில் உலகளவில் ₹25 கோடியை எட்டும் என வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர்.
மொத்தம் ₹35 கோடியில் உருவாகியுள்ள ‘டிராகன்’, இரு நாட்களிலேயே தனது பட்ஜெட்டின் பாதியை தாண்டியுள்ளது. டிக்கெட் முன்பதிவு தீவிரமாக நடைபெறுவதால், வசூல் தொடர் உயர்வை நோக்கி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.