இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில யமஹா டூவீலர்ஸ் மிகவும் பிரபலமான பிராண்டாக உள்ளது. கடந்த மாதத்தில், அதாவது 2025 ஜனவரியில், யமஹா ரே ஸெட்ஆர் நிறுவனத்தின் அதிகம் விற்பனையான பைக்காக மாறி உள்ளது. இந்த நிலையில் யமஹா ரே ஸெட்ஆர் மொத்தம் 15,209 பைக்குகளை விற்று, வருடத்திற்கு 26.25 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. சரியாக ஒரு வருடம் முன்பாக, அதாவது 2024 ஜனவரில், யமஹா ரே ஸெட்ஆர்க்கு மொத்தம் 12,047 புது வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளனர். கடந்த மாதம் மற்ற யமஹா மாடல்ஸ் விற்றதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இந்த விற்பனைப் பட்டியலில் யமஹா FZ 2வது இடத்தில் உள்ளது. யமஹா FZ மொத்தம் 11,399 யூனிட் மோட்டார் பைக்குகளை விற்று, வருடா வருடம் 22.34 சதவீதம் குறைந்துள்ளது. இந்த விற்பனை பட்டியலில் யமஹா MT15 அடுத்த இடத்தில் உள்ளது. MT15 மொத்தம் 10,640 யூனிட் மோட்டார் பைக்குகளை விற்று, வருடா வருடம் 29.65 சதவீதம் குறைந்துள்ளது. இதுபோக, இந்த விற்பனைப் பட்டியலில் யமஹா R15 4வது இடத்தில் உள்ளது. இதனிடையே R15 மொத்தம் 8,264 யூனிட்களை விற்று, விற்பனை 14.59 சதவீதம் குறைஞ்சிருக்கு.
கடந்த மாதம் யமஹாவின் விற்பனைப் பட்டியலில் யமஹா ஃபாசினோ 5லது இடத்தில் உள்ளது. யமஹா ஃபாசினோ மொத்தம் 8,261 யூனிட் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி உள்ளன. 1.04 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த விற்பனைப் பட்டியலில் யமஹா ஏரோக்ஸ் ஆறாவது இடத்தில் உள்ளது. யமஹா ஏரோக்ஸ் மொத்தம் 1,770 யூனிட் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி உள்ளது. 33.28 சதவீதம் குறைந்துள்ளது. இந்த விற்பனைப் பட்டியலில் ஏழாவது இடத்தில் யமஹா R3/MT03 இருந்தது. 2 மோட்டார் சைக்கிள்ஸும் கடந்த மாதம் வெறும் 2 புது வாடிக்கையாளர்கள் மட்டும்தான் கிடைத்துள்ளனர், இது கடந்த வருடத்தை ஒப்படுகையில் 93.33 சதவீதம் குறைவு.
இனி யமஹா ரே ஸெட்ஆர பத்தி சொல்லணும்னா, இந்த ஸ்கூட்டர்ல 125 சிசி கெபாசிட்டி உள்ள ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் 8.2 பிஎச்பி பவரையும் 6500 ஆர்பிஎம்ல 10.3 என்எம் டார்க் பவரையும் கொடுக்கும். ஹைப்ரிட் பவர் அசிஸ்டன்ட் மற்றும் ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டரோட (எஸ்எம்ஜி) காம்பினேஷன் ஸ்கூட்டரோட பெர்ஃபார்மன்ஸ இம்ப்ரூவ் பண்றது மட்டும் இல்லாம அத சைலன்ட்டாவும் ஆக்குது.