திராவிட இயக்க ஆய்வாளர் திருநாவுக்கரசு எழுதிய சுயமரியாதை இயக்க வரலாறு என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் திமுக துணை பொது செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தனி தமிழ்நாடு பெரியார் கேட்ட காரணமே ஜாதி ஒழிந்த தனி தமிழ்நாடு வேண்டும் என்று தான். பெரியார் மற்றும் அம்பேத்கருக்கு ஜாதி ஒழிப்பில் ஒரு பொது கருத்து உண்டு.
ஆனால் இருவருக்கும் மொழி உணர்வில் வெவ்வேறு கருத்துக்கள் உண்டு. இந்து மற்றும் முஸ்லிம் ஒற்றுமைக்கு இந்தி -உருது மொழிகளை இணைத்து இந்துஸ்தானி மொழியை உருவாக்கலாம் என்று காந்தி கூறினார். மேற்கு வங்காளத்தையும் கிழக்கு வங்காளத்தையும் பிரித்தது எது? மொழி தானே. மதம் சேர்க்காது மொழிதான் சேர்க்கும். மொழியால் பிரிக்கிறோம் என்று நீங்கள் சொன்னால் நாங்கள் பிரிவினை கேட்கவில்லை, நீங்கள்தான் எங்களை பிரிவினையை கேட்க வைக்கிறீர்கள் என்று பொருள் என ஆ ராசா பாஜக அரசுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.