தமிழர்கள் இந்தி கற்க விரும்பினால் திமுக அதனை எதிர்க்க முடியாது என்று, பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பை முன்னிறுத்தும் திமுக, இந்தி கற்க விரும்பும் தமிழர்களை தடுக்க முடியாது என்று பாஜகவின் முன்னாள் சட்ட அமைச்சர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் இந்தி கற்க விரும்பினால், அதை திமுக தடுக்க முடியாது. அப்படி முயன்றால், அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவின் கீழ் திமுக அரசு பதவி நீக்கப்பட வேண்டும்" என்று எச்சரித்துள்ளார்.
மேலும், 1991ஆம் ஆண்டு மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராக இருந்தபோது, விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்த முடிவுக்கு அப்போதைய முதல்வர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்ததாக அவர் குற்றம் சாட்டி உள்ளார்.
இதன் காரணமாக திமுக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டு, தேர்தல் நடத்தப்பட்டது என்றும், தேர்தல் அதன் முடிவில், மொத்த தொகுதிகளில் திமுகவுக்கு வெறும் 2 சட்டமன்ற உறுப்பினர் (MLA) மட்டுமே கிடைத்தன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.