பிரதமர் மோடியின் உள்துறை செயலாளராக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சக்தி காந்ததாஸ் நியமனம்…!!!
SeithiSolai Tamil February 23, 2025 01:48 AM

பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது உள்துறை செயலாளராக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சக்தி காந்த தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நரேந்திர மோடி பிரதமராக தொடரும் வரையில் அல்லது அடுத்த உத்தரவு வரும் வரையில் சக்தி காந்ததாஸ் இந்த பதவியில் நீடிப்பார். ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பி கே மிஸ்ரா பிரதமரின் உள்துறை செயலாளராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 6 வருடங்களாக சக்தி காந்த தாஸ் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்து சமீபத்தில் தான் ஓய்வு பெற்றார். மேலும் இந்த நிலையில்தான் தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது உள்துறை செயலாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.