சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் மைதானத்தில் இந்திய தேசிய கீதம் என்று ஒலிக்கப்பட்டது. இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்கு கருதி இந்திய கிரிக்கெட் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் முழுவதுமே துபாயில் விளையாடுகிறது. பாகிஸ்தானில் இந்தியா ஒரு போட்டி கூட விளையாடாது என்று அறிவிக்கப்பட்டது.
இன்று குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி தற்போது லாகூரின் கடாபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு போட்டி தொடங்கும் முன்பும் விளையாடும் இரண்டு நாடுகளின் தேசிய கீதம் ஒலிக்கப்படும். அந்த வகையில் இன்று இங்கிலாந்து நாட்டின் தேசிய கீதம் போட்டியின் தொடக்கத்தில் பாடப்பட்டது. அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் தேசிய கீதம் பாடப்பட வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக இந்திய தேசிய கீதம் பாடப்பட்டது. இதனால் மைதானத்தில் இருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.