எஸ்கேலாம் பேசலாமா? தயாரிப்பாளரை ஏமாத்தி செய்த நம்பிக்கை துரோகம்… வெடித்த பிரபலம்
CineReporters Tamil February 23, 2025 01:48 AM

Sivakarthikeyan: அமரன் திரைப்படத்தின் 100 நாள் வெற்றிவிழாவில் தன் சம்பளம் குறித்து பேசியது சர்ச்சையாகி இருக்கும் நிலையில் தற்போது பிரபல திரை விமர்சகர் பிஸ்மி பேசி இருக்கும் விஷயம் வைரலாகி வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியானது அமரன் திரைப்படம். அதுவரை சாதாரண ஹீரோவாக வலம் வந்த நடிகர் சிவகார்த்திகேயனின் கேரியர் கிராஃப் மிகப்பெரிய அளவில் உயர்ந்தது. கோட் திரைப்படத்தில் வேறு துப்பாக்கியை விஜய் கொடுத்ததும் இதற்கு முக்கிய காரணமானது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் மறைந்த முன்னாள் ராணுவ அதிகாரி மேஜர் முகுந்தின் வரலாற்றை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. படத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயனின் அதே பங்கை நடிகை சாய் பல்லவியும் கொடுத்து ஹிட்டடிக்க வைத்தார்.

இத்திரைப்படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை புரிந்தது. இந்நிலையில் இப்படத்தின் 100-வது நாள் வெற்றி கொண்டாட்டம் சமீபத்தில் நடத்தப்பட்டது. அதில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் பலர் என்னுடைய சம்பளத்தை பிடுங்க தான் பார்க்கின்றனர். படம் தொடங்குவதற்கு ஆறு மாதத்திற்கு முன்னதாகவே கமல் சார் எனக்கு சம்பளம் கொடுத்து விட்டதாக பேசி இருப்பார்.

இது குறித்து தற்போது பிரபல திரை விமர்சகர் பிஸ்மி கூறுகையில், சிவகார்த்திகேயன் தன்னுடைய சம்பளத்தை மற்றவர்கள் பிடுங்குவதாக பேசுகிறார். ஆனால் அவர்தான் மற்றவர்களின் காசை பிடுங்குவதில் குறியாக இருப்பார். இவருடன் இருந்த பிடி ராஜாவை வைத்து தன்னுடைய படங்களை தயாரித்தார்.

நிறைய படங்கள் தோல்வி அடைந்த நிலையில் அவருக்கு 75 கோடி கடன் ஆனது. உன்னால் தான் இந்த கடன் என அவர் எஸ் கே சாட தானே அந்த கடனை ஏற்றுக் கொள்வதாக சிவகார்த்திகேயன் தெரிவித்திருக்கிறார். ஆனாலும் அவர் சம்பாதித்து இந்த கடனை கட்டவில்லை.

தன்னை வைத்து யார் படத்தை இயக்குகிறார்களோ அவர்கள் இந்த கடனை ஏற்றுக்கொள்ளுமாறு கூறியிருக்கிறார். இப்படி வந்த தயாரிப்பாளர் கே.ஜே.ஆர்.ராஜேஷிடம் 3 படங்கள் நடித்து தருவதாக கூறி தன்னுடைய 75 கோடி கடனை அவர் தலையில் கட்டி விட்டார்.

ஆனால் அவருக்கு சிவகார்த்திகேயன் கொடுத்தது இரண்டு படங்களுக்கான கால்ஷீட் மட்டும் தான். மூணாவது படத்திற்கு கால்ஷீட் கொடுக்கவில்லை. இப்படி தன்னுடைய கடனை அடைத்த தயாரிப்பாளரின் முதுகில் குத்தி துரோகம் செய்தவர் எஸ்கே எனவும் குறிப்பிட்டுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.