அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், " இன்றைக்கு நம்முடைய கழகம் கொள்கை வீரர்களின் கூடாரமாகத் திகழ்கிறது. பதவிக்காகவும் பணத்தைச் சேர்ப்பதற்காகவும் கழகத்தைக் காட்டி கொடுக்கத் தயாராக இருந்த திரைமறைவு அரசியல் பேராசைக்காரர்களின் கனவுகளும், கற்பனைகளும் காகித ஓடம் போல் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. ஓநாயும் வெள்ளாடும் ஒன்றாக இருக்க முடியுமா ? களைகளும் பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகுமா? விசுவாசியும் துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா? முடியாது.... என்று நீங்கள் முழங்குவது கேட்கிறது " என்று தெரிவித்திருந்தார் .
டி.டி.வி தினகரன்:
இது தொடர்பாக டி.டி.வி தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்விகள் சில எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த அவர், "எடப்பாடி பழனிச்சாமி தன்னைத்தானே ஓநாய் என்று ஒப்புக்கொள்கிறார். யார் துரோகி என்று மக்களுக்குத் தெரியும். லாட்டரி சீட்டு அடுத்தது போல குருட்டு யோகத்தில் முதலமைச்சரான அவர், துரோகி என்ற வார்த்தைக்கு எடப்பாடி பழனிசாமியின் பெயர்தான் ஞாபகம் வரும் " என்று பதிலுரைக் கொடுத்துள்ளார்.