ஷங்கர் படத்தில் கதை திருட்டு விவகாரம், சொத்து பறிமுதல்னு இப்போ எங்கு பார்த்தாலும் அவரைப் பற்றிய செய்திகள்தான் ஊடகங்களில் வந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து பிரபல எழுத்தாளர் கிருஷ்ணவேல் என்ன சொல்றாருன்னு பாருங்க.
சிட்டுக்குருவி: செல்போன் டவரால் சிட்டுக்குருவி சாகுதுன்னு எந்திரன் படத்துல எடுத்துருப்பாரு. உண்மையிலேயே சிட்டுக்குருவி காணாமப்போனதுக்குக் காரணம் சூப்பர் மார்க்கெட்தான்.
அப்போ பருப்பு எல்லாம் சாக்கு மூட்டையில மொத்தமா மளிகைக் கடைக்கு வரும். அதை சில்லறைக்கு வாங்கி வந்து வீட்டுல கழுவி காயப்போடுவாங்க. அப்போ சிட்டுக்குருவி வந்து சாப்பிடும். சூப்பர் மார்க்கெட் வந்தபிறகு அவனே எல்லாத்தையும் மிஷின்லயே க்ளீன் பண்ணி பேக் பண்ணிக் கொடுத்துடறான்.
அறிவியல் உண்மை: நாம அப்படியே டப்பால போட்டுருவோம். அப்போ சிட்டுக்குருவி குஞ்சு பொரிக்கும். அதுக்கு புரோட்டீன் வேணும்னு கொசுவோட முட்டையை எடுத்து ஊட்டி விடும். அதனால கொசு கம்மியா இருந்துச்சு. இதுதான் அறிவியல் உண்மை. ஆனா படத்துல செல்போனால சிட்டுக்குருவி அழிஞ்சுடுதுன்னு சொல்றாங்க.
நுண் அரசியல்: ஆனா நோக்கம் அது அல்ல. அதுல ஒரு புரொபசர் பேசுறாரு. நான் டெக்னாலஜிக்கு எதிரானவன் இல்ல. ஏன் எல்லாரும் செல்போனை யூஸ் பண்ணனும்? தேவையானவர்கள் மட்டும் பண்ணலாமே. இதுலதான் நுண் அரசியல் இருக்கு. அப்படின்னா யாருக்கு தேவை? யாருக்கு தேவையில்லன்னு யார் முடிவு பண்றது?
அதிகாரத் திமிர்: அதைத் தீர்மானிக்கிறதுக்கு நீ யாரு? அதிகாரத் திமிர்னு சொல்லலாம். அதைக் காட்டத்தான் எந்திரன் 2 படமே எடுத்துருக்காங்க என்று சொல்கிறார் கிருஷ்ணவேல். கதை திருட்டு நேர்மையா இருந்தா இந்தக் கேஸே வந்துருக்காது. எல்லாருக்கும் நேர்மையை சொல்லிக் கொடுப்பாரு ஷங்கர். அவருதான் அப்படி இருக்க மாட்டாரு.
மிஸ்டர் ரைட்: முதல்ல படத்துலயே இதை எல்லாம் பார்த்து தழுவி தான் எடுத்திருக்கோம்னு போட்டா கேஸே நிக்காது. ஆரூர் தமிழ்நாடன் எழுதுன கதைக்கு முன்னாடியே வந்த படம் மிஸ்டர் ரைட். இவரு கதையை எல்லாம் படிச்சிருக்க மாட்டாரு. அந்தப் படமே மொக்க படம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.