பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் இவருடனா? பழச மறக்க முடியுமா?
CineReporters Tamil February 25, 2025 03:48 AM

பிரதீப் ரங்கநாதன்: இப்போது அனைவருக்கும் பிடித்தமான பிரபலமாக மாறி வருபவர் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன். கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பிரதீப் ரங்கநாதன். முதல் படமே மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. முற்றிலும் வேறுபட்ட கதைகளத்தில் யாருமே தொடாத ஒரு ஜானரில் படத்தை கொடுத்து வெற்றி இயக்குனராக அறிமுகமானார்.

இந்தப் படத்தை தயாரித்தது வேல்ஸ் இண்டர்னேஷனல் நிறுவனம். அடுத்ததாக ஏஜிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து லவ் டுடே படத்தை எடுத்தார் பிரதீப் ரங்கநாதன். அந்தப் படத்தை இயக்கியதும் பிரதிப் ரங்கநாதன்தான். அந்தப் படமும் ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்த படமாக மாறி ஒரு தவிர்க்க முடியாத நடிகராகவே மாறினார். அந்தப் படத்தின் கதையை முதலில் ஏஜிஎஸ் நிறுவனம் நிராகரிக்க அர்ச்சனா கல்பாத்திதான் அந்த கதையில் ஏதோ ஒன்று இருக்கிறது என தன் கையில் எடுத்தார் அர்ச்சனா கல்பாத்தி.

அவர் நினைத்ததை போல படம் பயங்கர ஹிட். அதிலிருந்தே பிரதீப் ரங்கநாதன் மீது அனைவர் கவனமும் திரும்பியது. இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் சில தினங்களுக்கு முன் ரிலீஸான திரைப்படம் டிராகன். அந்தப் படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. முதலில் டிராகன் படத்தின் டீஸர் மற்றும் டிரெய்லரை பார்த்த சிலர் இது டான் படம் மாதிரியே இருப்பதாக ட்ரோல் செய்து வந்தனர்.

மாஸ் காட்டும் அஸ்வத் மாரிமுத்து: ஆனால் படம் ரிலீஸான பிறகு ஐயய்யோ இந்தப் படத்தையா ட்ரோல் செய்தோம் என அஸ்வத் மாரிமுத்துவிடம் மன்னிப்பு கேட்டு வருகிறார்கள். அந்தளவுக்கு டிராகன் படம் 2கே ஹிட்ஸ்களுக்கு மிகவும் பிடிக்க திரையரங்கு முழுவதும் இளைஞர்களாகவே நிரம்பி வழிகின்ரனர். படத்தை கொண்டாடி வருகிறார்கள். இந்த வெற்றியை தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து மீண்டும் இதே கூட்டணியில் மறுபடியும் ஒரு படத்தை பண்ணுவோம் என பேட்டியில் கூறினார்.

ஐசரி கணேஷ் ஷாக்: மீண்டும் ஏஜிஎஸ் நிறுவனத்துடன் கூட்டணி என்றதும் ஐசரி கணேஷ் ஷாக் ஆகிவிட்டார். ஏனெனில் கோமாளி படத்திற்கு பிறகு பிரதீப் ரங்க நாதனுடன் மீண்டும் கைகோர்ப்பதாக இருந்த ஐசரி கணேஷ் லவ் டுடே படம் வந்ததும் சரி அதை முடித்து விட்டு வரட்டும் என காத்துக் கொண்டிருந்தார் ஐசரி கணேஷ். ஆனால் இப்போது டிராகனுக்கு பிறகு மீண்டும் ஏஜிஎஸ் உடன் பிரதீப் என்ற தகவலை கேட்டதும் பிரதீப்பிடம் முதலில் என் படத்தை முடித்து விடுங்கள் என கூறியிருக்கிறாராம். அது அவர் இயக்கினாலும் சரி, நடித்தாலும் சரி. தன்னுடைய பேனரில் அடுத்த படம் கண்டிப்பாக பிரதீப் ரங்க நாதன் இருக்க வேண்டும் என ஐசரி கணேஷ் உறுதியாக கூறிவிட்டாராம்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.