ஐ.சி.சி 2025 சாம்பியன்ஸ் டிரொபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் நடத்தி வருகிறது. இந்திய அணி பாகிஸ்தான் மண்ணில் விளையாட மறுத்ததால், இந்திய அணி விளையாடும் போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்தப் போட்டிகள் கராச்சி, ராவல்பிண்டி, லாகூர் மற்றும் துபாயில் நடைபெற்று வருகின்றன. இதில் "ஏ" பிரிவில் இருக்கும் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் இடம் பிடித்துள்ளன.
பாகிஸ்தான் அணி:
மேலும் இப்போட்டியை நடத்தும் பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் கடும் நெருக்கடி கொடுக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு நேர் மாறாக நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 60 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அதன் பின் இந்தியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் 240 ரன் மட்டும் எடுத்தது மட்டுமின்றி 6 விக்கெட் வித்தியாசத்தில் மீண்டும் தோல்வியைச் சந்தித்தது. இதனால் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை ஏறக்குறைய இழந்துவிட்டது.
கிரிக்கெட் வாரியம் முடிவு;
மேலும் இன்றைய போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக நியூசிலாந்து வெற்றிப் பெற்றால் இந்தியா மற்றும் நியூசிலாந்து அரை இறுதிக்கு முன்னேறி விடும். அதுமட்டுமின்றித் துயரம் அளிக்கும் விதமாகப் பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேற்றப்படும். இதைத் தொடர்ந்து முதல் 2 போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் பாகிஸ்தான் அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளர் மற்றும் துணைப் பயிற்சியாளர் என இருவரையும் பதவியில் இருந்து விடுவிக்கப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம்:
மேலும் பாகிஸ்தான் அணி மார்ச் 16ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடருக்காக புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட இருப்பதாகத் தெரிகிறது. இப்பிரச்சனையைச் சரி செய்ய முன்னாள் வீரர்களில் ஒருவரைத் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.