சூனியம் வைக்க 21 லட்சம் கொடுத்த நபர்; ஏமாற்றிய ஆசாமி; தூக்கிய போலீசார்..!
Seithipunal Tamil February 25, 2025 09:48 AM

ஒருவரை கொலை செய்வதற்காக சூனியம் வைக்க சொல்லி, 21 லட்சம் கொடுத்து ஒருவர் ஏமார்ந்துள்ளார். கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் ரகு என்பவர் சென்னையில் மாந்திரீக தொழில் செய்து வந்துள்ளார்.  

அத்துடன் இவர்  யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் மாந்திரீகம் குறித்த வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். இதனை பயன்படுத்தி கூகுள் பே மூலம் பணம் பெற்று பலரை ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், பெரம்பலூர் துறைமங்கலத்தை சேர்ந்த ரமேஷ் கிருஷ்ணா என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த சிபி என்ற முரசொலி மாறன் என்பவரை மாந்திரீகம் மூலம் கொல்வதற்காக ரகுவிற்கு, சுமார் ரூ. 21 லட்சம் வரை கூகுள் பே-வில் பணம் அனுப்பி ஏமார்ந்து போயுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிபி, பெரம்பலூர் காவல்நிலையத்தில் ரகு மீது புகார் அளித்துள்ளார். குறித்த புகாரின் பேரில், ரமேஷ் கிருஷ்ணா மற்றும் ரகுவை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.