கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே ஜெபக்கூடத்தில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மத போதகர் ஜான்ரோஸ், மனைவி மற்றும் மகனுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
செம்பருத்திவிளையைச் சேர்ந்த ஜான்ரோஸ், பெருஞ்சிலம்பில் ஜெபக்கூடம் நடத்தி வந்துள்ளார். அப்பகுதியைச் சேர்ந்த தொழிலாளியின் மனைவியும் மகளும் அங்கு அடிக்கடி சென்றுள்ளனர். சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, ஜான்ரோஸ் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
பெற்றோர் கேட்டபோது ஜான்ரோஸ் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் சிறுமியை கேரள மாநிலம் கொல்லத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் போலீசாருக்கு தகவல் கொடுத்ததும் ஜான்ரோஸ் தலைமறைவானார்.
மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த ஜான்ரோஸ் கோவையில் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த மனைவி ஜெலின் பிரபா, மகன் பிரதீப் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.