அம்பேத்கர் வாழ்க என கோஷமிட்ட அதிஷி சஸ்பெண்ட்.. டெல்லியில் பரபரப்பு..!
WEBDUNIA TAMIL February 25, 2025 09:48 PM

டெல்லியில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்த நிலையில், முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார்.

இந்த நிலையில், டெல்லி முதல்வர் அலுவலகத்தில் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்பட்டதாக முன்னாள் முதல்வர் அதிஷி குற்றஞ்சாட்டினார். இந்த நிலையில் இன்று சட்டமன்றம் தொடங்கியவுடன், எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி தலைமையில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

முதல்வர் அலுவலகத்திலிருந்து அம்பேத்கரின் படங்கள் அகற்றப்பட்டதற்கு எதிராக அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். மேலும், "அம்பேத்கர் வாழ்க" என கோஷமிட்டனர். அதற்கு பதிலடியாக பாஜக உறுப்பினர்கள் "மோடி வாழ்க" என்ற கோஷத்தை எழுப்பினர்.

இதனை அடுத்து, சட்டமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அமளியில் ஈடுபட்ட அதிஷி உள்பட 12 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.