தர்பூசணி (Watermelon) என்பது பலருக்கும் விருப்பமான ஒரு பழம். அதிலும் வெயில் காலத்தில் அதிகமாக கிடைக்கும். இதில் அதிகளவில் நீர், வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடண்டுகள் இருப்பதால், இது உடலுக்கு ஆரோக்கியமும் கூட. வெயில் காலத்தில் உடல் சூட்டை குறைக்கும் தன்மை கொண்டது. ஆனால், அனைவரும் தர்பூசணி பழம் சாப்பிடலாமா என்றால் கண்டிப்பாக கிடையாது. சில குறிப்பிட்ட நோய்கள் மற்றும் உடல் நிலை காரணமாக, சிலர் இதைத் தவிர்க்க வேண்டும். யார் எதற்கு இந்த பழத்தைச் சமாளிக்க முடியாது என்பதைக் காணலாம்.
1. நீரிழிவு உள்ளவர்கள் :
தர்பூசணி பழம் இயற்கையாகவே அதிக கிளைகேமிக் இன்டெக்ஸ் (Glycemic Index - GI) கொண்டது. இதன் GI மதிப்பு 72 ஆக உள்ளது, இது அதிகப்படியான சர்க்கரையை உடலில் சேர்க்கக் கூடியது. எனவே உடலுக்குள் சர்க்கரை மிக வேகமாக அதிகரிக்கும். ரத்த சர்க்கரை நிலை வேகமாக உயர வாய்ப்பு உள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு ஏற்படலாம். இதனால் சர்க்கரை நோயாளிகள் மிகச்சிறிய அளவில் மட்டுமே தர்பூசணி பழத்தை உண்பது சிறந்தது.
2. ரத்த அழுத்தம் குறைவாக உள்ளவர்கள் :
தர்பூசணியில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இது ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மை கொண்டது. ஏற்கனவே ரத்த அழுத்தம் குறைவாக (Hypotension) இருக்கும் நபர்களுக்கு சோர்வு மற்றும் மயக்கம் ஏற்படலாம். இது தலைசுற்றல், மயக்கம் ஆகிய பிரச்சினைகளை உருவாக்கலாம். BP குறைவாக வைத்திருப்பவராக இருந்தால், அளவோடு மட்டுமே தர்பூசணி சாப்பிட வேண்டும்.
3. சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் :
தர்பூசணி அதிகமான நீர் மற்றும் பொட்டாசியம் கொண்டிருக்கிறது. சிறுநீரக செயல்பாடு சரியாக இல்லாதவர்களுக்கு இது பெரிய சிக்கலை ஏற்படுத்தலாம். அதிக பொட்டாசியம் உடலில் சேமித்து, கிட்னி செயல்பாட்டை பாதிக்கலாம். நீரிழிவு உள்ளவர்களுக்கு கூடுதல் சிக்கல் ஏற்படுத்தும்.
வீக்கம் மற்றும் சிறுநீர் பிரச்சனை ஏற்படலாம். சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனை இல்லாமல் தர்பூசணியை அதிகமாக சாப்பிடக் கூடாது.
4. செரிமானக் கோளாறுகள் உள்ளவர்கள் :
தர்பூசணி அதிக நீர் மற்றும் சர்க்கரை கொண்டிருப்பதால், சிலருக்கு இது செரிமான பிரச்சனை ஏற்படுத்தலாம். வயிற்றில் அதிக வாயு (Bloating), பித்த கோளாறு ஏற்படும். அதிக நீர் உள்ளதால், அடிக்கடி மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு ஏற்படும். இது ஏற்கனவே அலர்ஜி உள்ளவர்களுக்கு குடல் பாதிப்பை ஏற்படுத்தலாம். வாயு பிரச்சனை உள்ளவர்கள் மிகச்சிறிய அளவில் மட்டுமே சாப்பிட வேண்டும்.
5. உடல் எடை அதிகரிக்கக் கூடாது என்று நினைப்பவர்கள் :
தர்பூசணி சத்துக்கள் நிறைந்தது என்றாலும், இது இயற்கை சர்க்கரை அதிகமாக கொண்டுள்ளது. அதிகமாக உண்பது உடல் கொழுப்பை அதிகரிக்கலாம்.
இது மெட்டபாலிசத்தை மந்தமாக்கலாம். உடலின் சர்க்கரை நிலை உயர்ந்து, கொழுப்பு சேமிப்பு அதிகரிக்கலாம். உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும் நபர்கள் அளவாக மட்டும் தர்பூசணி சாப்பிட வேண்டும்.
6. அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் :
சிலருக்கு தர்பூசணியில் உள்ள சிறப்பு புரதங்கள் மற்றும் கார்போஹைட்ரேட் கலவைகள் உடலில் அலர்ஜி விளைவிக்கலாம். சொறி, தோல் புண், வீக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். தூக்கமின்மை, மூச்சு விட பிரச்சனை, கடுமையான அலர்ஜிக் ரியாக்ஷன் (Anaphylaxis) வரக்கூடும். தர்பூசணி சாப்பிட்டதும் உடலில் மாற்றங்கள் தோன்றினால், அதை உடனே நிறுத்தி மருத்துவரை அணுகவும்.
7. இரவில் உண்பது தவிர்க்க வேண்டியது :
தர்பூசணி அதிக நீர்ச்சத்து கொண்டதால், இரவில் உண்பதால் சிறுநீர் பெருகி, தூக்கத்தை பாதிக்கலாம். இரவு நேரத்தில் சிறுநீர் அழுத்தம் அதிகரிக்கும்.
சோர்வும் தூக்கக் குறையும் ஏற்படலாம். அதிக சர்க்கரை உள்ளதால், இரவு உடலுக்குள் இன்சுலின் அளவு அதிகரிக்கும். தர்பூசணியை இரவில் உண்பதைத் தவிர்த்து, பகல் அல்லது மாலை நேரத்தில் மட்டுமே உண்பது நல்லது.