சீன AI செயலியான “டீப்சீக்” உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகின்றது. இதன் மூலம் மனிதனின் நுண்ணறிவு தேவைப்படும் பணிகளையும் கம்ப்யூட்டர் மூலமே செய்து முடிக்க முடியும். ஆகவே செயற்கை நுண்ணறிவை மேம்படுத்த உலக நாடுகள் பலவும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக சீனாவும் “டீப் சீக்” என்ற செயற்கை நுண்ணறிவு செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. இது அறிமுகமான சில வாரங்களிலேயே உலக அளவில் பிரபலமானது. இந்நிலையில் இச்செயலி இந்திய பயனர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் அதனை இந்தியாவில் பயன்படுத்த தடை விதிக்க கோரி டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வழக்கறிஞர் ஒருவர் இணைக்க வேண்டும் என ஐகோர்ட் தெரிவித்ததோடு வழக்கு விசாரணையை ஏப்ரல் மாதம் ஒத்தி வைத்தது. இந்நிலையில் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று கூறி டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வில் முறையிடப்பட்டது. அதற்கு நீதிபதிகள் “டீப் சீப்” செயலி பயனர்களுக்கு ஆபத்தை தர கூடும் என்றால் அதனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் மாறாக அதனை கட்டாயப்படுத்த வேண்டும் என்ற நடைமுறை உள்ளதா என மனுதாரரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் அவசர வழக்காக விசாரிக்க கூடிய அளவிற்கு முகாந்திரம் இல்லை என்று கூறி அந்த மனுவை நிராகரிப்பதாக நீதிபதிகள் அமரில் தெரிவிக்கப்பட்டது.