தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக இருக்கிறார் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் சின்னத்திரை விஜய் டிவியில் தொகுப்பாளராக தனது கேரியரை தொடங்கினார் சிவகார்த்திகேயன். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
மெரினா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் காமெடி கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதற்கு பிறகு மெல்ல மெல்ல கமர்சியல் திரைப்படங்களான வேலைக்காரன், அயலான், சீமராஜா போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு இவர் நடித்த அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் சிவகார்த்திகேயன். அதற்குப் பிறகு பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
குறுகிய காலத்தில் மிக அதிக உயரத்தை எட்டிய சிவகார்த்திகேயனை பற்றி தான் இன்று சினிமா வட்டாரங்கள் பலவற்றிலும் பேச்சுகள் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் நடிகர் ஷாம் தற்போது சிவகார்த்திகேயன் அவர்களின் வளர்ச்சியை பற்றி பேசி இருக்கிறார்.
ஷாம் கூறியது என்னவென்றால் சினிமாவில் அவ்வளவு சீக்கிரம் யாராலும் சாதித்து விட முடியாது. சினிமாவை அளவுக்கு அதிகமாக நேசிப்பவர்களால் தான் இவ்வாறு சாதிக்க முடியும். அந்த வகையில் சிவகார்த்திகேயன் கடினமாக உழைத்திருக்கிறார். அதன் பலனாக இன்று அவர் உயரத்தில் இருக்கிறார் என்று ஓபனாக பேசியிருக்கிறார் நடிகர் ஷாம்.