சேலம் மாவட்டம் மாறமங்கலத்தைச் சேர்ந்த 27 நபர்கள் கன்னியாகுமரிக்கு நேற்று முன்தினம் சுற்றுலா வந்தனர். அவர்கள் காந்தி மண்டபம் பின்புறம் இருக்கும் மரண பாறை மீது ஏறி நின்று செல்பி எடுத்தனர். தடை செய்யப்பட்ட கடல் பகுதியில் அந்த மரண பாறை உள்ளது. இந்த நிலையில் செல்பி எடுத்த போது விஜய் என்பவர் கால் தவறி கடலில் விழுந்து அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டார்.
இதுகுறித்து அறிந்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படகுகள் மூலம் விஜயை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு நேற்று காலை போலீசார் விஜயின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.