வெறும் ரூ.70 முதலீட்டில் ரூ.3 லட்சம் வரை லாபம் பெறலாம்… போஸ்ட் ஆபீஸ் வழங்கும் சிறந்த முதலீட்டு திட்டம்…!!!
SeithiSolai Tamil February 25, 2025 09:48 PM

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சேமிப்பு என்பது அதிகமாகிவிட்டது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக மக்கள் தங்களுடைய சேமிப்பிற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க தொடங்கிவிட்டனர். சேமிப்பாக சிறு தொகையை வைத்திருப்பது எதிர்பாராத தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு உதவியாக இருக்கும். இவ்வாறு நீங்கள் சேமிக்கும் பணத்தை முதலீடு செய்வதற்கு அரசு பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி போஸ்ட் ஆபீஸில் வழங்கப்படும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் என்பது ஒரு நீண்ட கால சேமிப்பு திட்டமாகும்.

இந்த திட்டத்தின் மூலமாக உங்களுடைய சேமிப்பு பணத்தை முதலீடு செய்து அதற்கு ஏற்ற லாபத்தை பெற்றுக் கொள்ளலாம். இது முழுக்க முழுக்க அரசு செயல்படுத்தி வரும் திட்டம் என்பதால் உங்களுடைய முதலீட்டிற்கு எந்த ஒரு ஆபத்து ஏற்படாது. இந்த திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். அது மட்டுமல்லாமல் இந்த திட்டத்தின் லாகின் காலம் 15 ஆண்டுகள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் தினமும் 70 ரூபாய் முதலீடு செய்து வர ஆண்டுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்கலாம். இதன் அடிப்படையில் பார்த்தால் 15 ஆண்டுகால முடிவில் நீங்கள் மொத்தமாக மூன்று லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து இருப்பீர்கள். உங்களுடைய சேமிப்பு காண வட்டி வருமானம் மட்டுமே 3,03,035 ரூபாயாக இருக்கும். இந்த இரண்டு தொகையையும் சேர்த்தால் முதிர்வின்போது உங்களுக்கு மொத்தமாக 6,78,035 ரூபாய் கிடைக்கும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.