“தமிழ்நாட்டில் 63 வாரங்களுக்கு தவெக தான் எதிர்க்கட்சி”… விஜய் தான் எதிர்க்கட்சித் தலைவர்… பரபரப்பை கிளப்பிய ஆதவ் அர்ஜுனா..!!
SeithiSolai Tamil February 26, 2025 11:48 PM

தமிழக வெற்றி கழகத்தின் ஆண்டுவிழா மற்றும் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் அந்த கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, பிறப்பால் ஒரு தலைவர் உருவாகக்கூடாது மன்னராட்சி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறியதற்காக என்னை பல சூழ்ச்சிகள் சூழ்ந்து கொண்டது. அந்த சமயத்தில் என்னை அழைத்தவர் விஜய். சினிமா துறையில் உச்சத்தில் இருந்த போதே அதனை துறந்து அரசியலுக்கு அவர் வந்துள்ளார். தளபதி என்ற நிலையிலிருந்து தலைவர் என்ற நிலைக்கு அவர் உயர்ந்துள்ளார்.

சினிமா துறையில் பல தொழில்களை நடத்தும் அரசாக இன்றைய அரசு இருக்கிறது. ஆனால் என் தலைவரை பார்த்து நடிகர் என்கிறார்கள். என் தலைவர் முன்பாக தான் அவர்கள் நடிக்கிறார்கள். அடுத்த 63 வாரத்திற்கு நாம் தான் எதிர்க்கட்சி. விஜய் தான் எதிர்க்கட்சித் தலைவர். 1967 இல் அண்ணா ஏற்படுத்தியது போல் 1977 எம்ஜிஆர் ஏற்படுத்தியது போல் மீண்டும் ஒரு பிளவு ஏற்படும். அதற்கு அஜெண்டாவும் ரெடி பிளானிங்கும் ரெடி. இன்னும் பல தலைவர்கள் தமிழக வெற்றிக்கழகத்திற்கு வரப் போகிறார்கள். மேலும் இன்னும் பல பூகம்பங்கள் தமிழக அரசியல் நடக்கப்போகிறது என்று கூறினார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.