பிரபல பி.வி.ஆர் சினிமாஸில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
டெல்லியில் உள்ள செலக்ட் சிட்டி மாலில் இருக்கும் பி.வி.ஆர் சினிமாஸில் மாலை 4:15 மணிக்கு "சாவா" திரைப்படம் திரையிடப்பட்டபோது திரையின் ஒரு மூலையில் தீப்பிடித்ததாகப் தகவல் வெளியானது. தீ எச்சரிக்கை ஒலி எழுப்பியவுடன், பார்வையாளர்கள் வெளியேறும் வழியை நோக்கி விரைந்தனர். திரையரங்கம் உடனடியாகக் காலி செய்யப்பட்டது.
தீ விபத்து குறித்து மாலை 5.42 மணிக்கு தகவல் கிடைத்ததும் 6 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீயணைப்புத் துறையினர் இது ஒரு சிறிய தீ விபத்து என்றும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் உறுதிப்படுத்தினர். மாலை 5.55 மணிக்குள் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது.
சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. தீ விபத்தில் யாரும் சிக்கவில்லை என்பதை உறுதி செய்துள்ளனர். மாலின் செய்தித் தொடர்பாளர், அருகிலுள்ள மல்டிபிளக்ஸில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறினார். மனித உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், வழக்கமான செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.