சீன வாலிபருக்கு ஷாக் கொடுத்த காதலி...பொண்ணு னு நெனச்சு பழகுனா...
Newstm Tamil February 28, 2025 12:48 PM

சீனாவின் ஷாங்காய் நகரை சேர்ந்த வாலிபர், சமூக வலைத்தளங்களில் பெண்களை தேடி உள்ளார். காதலிக்க பெண் தேடியபோது, ஜியாஓ என்ற பெண் அறிமுகம் ஆனார். அந்த வாலிபர், அந்த பெண்ணிடம் தனது மனதை பறிகொடுத்தார். அந்த பெண்ணுடன் நீண்ட நேரம் உரையாடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு தனது காதலை அவர் வளர்த்து வந்துள்ளார்.

அப்போது அந்த பெண்ணோ, வாலிபரிடம் நாம் சேர்ந்து தொழில் தொடங்கலாம் என கூறி உள்ளது. மேலும் தனது உறவினருக்கு உடல் நலம் சரியில்லை என்றும், மருத்துவ செலவுக்கு பணம் தேவை என்றும் கூறி வாலிபரிடம் பணத்தை பறித்து வந்துள்ளது. ஒட்டுமொத்தமாக அந்த வாலிபரிடம், அந்த பெண் ரூ.24 லட்சத்தை பறித்து உள்ளார். இதற்கிடையே சந்தேகம் அடைந்த வாலிபர் விசாரித்து உள்ளார்.

அந்த சமயத்தில் தான், தான் ஒரு ஏஐ காதலியிடம் ஏமாற்றப்பட்டதை வாலிபர் அறிந்தார். உடனே அவர் இதுகுறித்து போலீசிடம் புகார் அளித்து உள்ளார். இந்த விவகாரத்தில், ஏஐ கொண்டு மர்ம கும்பல் பெண் குரல் பேசியும், பெண்ணை போன்றும், சீன வாலிபரிடம் நடந்து கொண்டுள்ளனா்.

அவற்றை எல்லாம் உண்மை என நம்பிய சீன வாலிபர், ஏஐ செயலியில் உருவான காதலியை நம்பி பல லட்சங்களை இழந்தது தெரிந்தது. அந்த கும்பல் இதையே தொழிலாக வைத்து இருந்ததும் தெரியவந்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.