தமிழகத்தில் தர்மபுரியில் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், சம்மனை கிழிப்பதும் கிழிக்காததும் எங்கள் விருப்பம். ஓசூர் வந்து என்னிடம் போலீசார் சம்மன் வழங்க மாட்டார்களா? சம்மனை வீட்டில் ஒட்டியதோடு, போலீசாரின் வேலை முடிந்தது. போலீசார் கதவில் சம்மனை ஒட்டியதன் நோக்கம் என்ன? நீலாங்கரை காவல் ஆய்வாளர் வீட்டுக்கு வந்து காவலாளியை அடித்து இழுத்துச் சென்றது ஏன்?
வயசுக்கு வந்து குச்சுல உட்காந்துட்டு இருக்குற புள்ளைய, தூக்கிட்டு போய் சோளக்காட்டுல வச்சி குண்டுகட்டா கற்பழிச்சு விட்டமாதிரி எல்லாரும் கதறிட்டு இருக்கீங்க. என் கூட மோதி ஜெயிக்க முடியல. என்னைய பார்த்து நீ நடுங்கிட்ட, சமாளிக்க முடியல. என்ன செய்யனு தெரியாம, அப்பப்போ ஒரு பொம்பளைய கொண்டுவந்து முன்னாடி நிறுத்துறீங்க. என்னமோ, கல்லூரில படிச்சுட்டு இருக்குற புள்ளைய தூக்கிட்டு போய் கற்பழிச்சுவிட்ட மாதிரி.
தனித்து நின்று என்னை எதிர்க்க முடியுமா? 234 தொகுதிகளிலும் தனித்து நின்று காசு கொடுக்காமல் திமுகவால் வெல்ல முடியுமா?, என்னைப் போன்று தனித்து நின்று என்னை எதிர்க்க ஸ்டாலின் தயாரா? கருணாநிதி மகனா? பிரபாகரன் மகனா? என்பதை களத்தில் தனித்து நின்று பார்ப்போம். தமிழா? திராவிடமா? என்பதை 2026 தேர்தலில் தனித்து நின்று வென்று காட்டுவோம்” எனக் கூறியுள்ளார்.