சொக்க வைக்கும் கண் அழகுக்கு செம டிரெண்டான 5 கண் மேக்கப்கள்
GH News February 28, 2025 10:10 PM

கண்கள் என்பது ஒருவரின் முகத்தில் மிக முக்கியமான அடையாளமாகக் கருதப்படுகிறது. அது மற்றவர்களை கவர்ந்து இழுக்கும் அழகுடன் நம்முடைய கண் இருந்து விட்டால் முகத்தின் அழகை இன்னும் கூடுதலாகவே காட்டும். அதற்கு சரியான கண் மேக்கப் (Eye Makeup) மிக அவசியம். தற்போது உலகளவில் அதிகம் ஃபேஷன் இன்ஃலூயன்சர்கள், மாடல்கள், சினிமா நட்சத்திரங்கள் அதிகம் பயன்படுத்தும் Top 5 Eye Makeup Trends பற்றி விரிவாக பார்ப்போம்.

1. டூயல் டோன் ஐஷாடா :

இது ஒரு நவீனமான, வண்ணமயமான, புதுமையான கண் மேக்கப் ஆகும். ஒரே நேரத்தில் இரண்டு வண்ணங்களால் கண்களுக்கு அழகு சேர்ப்பது தான் Dual-Tone Eyeshadow எனப்படும். இது சாதாரண ஐஷாடா பயன்பாட்டை விட சிறப்பாகவும், தனித்துவமான லுக்கையும் தரக்கூடியதாகவும் இருக்கும்.

பயன்படுத்தும் முறை :

கண்களுக்குள் ஆழம் கொடுக்க டார்க் ஷேட்களை மேல் பகுதியிலும், லைட் மற்றும் ப்ரைட் கலர்களை உட்புற பகுதியில் பயன்படுத்தலாம். அதனுடன் மெல்லிய கிளிட்டர் சேர்த்தால் கண்கள் இன்னும் ஜொலிக்கும். நீலம் + மஞ்சள், ஊதா + பிங்க், எமரால்ட் கிரீன் + தங்கம் போன்ற காம்பினேஷன்களில் இதை பயன்படுத்துவது செம ஹாட் லுக்கை கொடுக்கும்.

2. மெட்டாலிக் கண் மேக்கப் : 

Metallic Eye Makeup தற்போது ரன்‌வேய்களில் (Runway), மெகா நிகழ்வுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் டிரெண்டாக உள்ளது. கண்களுக்கு ஒரு கிளாமரஸ், மின்னும் தோற்றத்தை இது வழங்கும்.

பயன்படுத்தும் முறை :

மெட்டாலிக் ஐஷாடோவை கைரேகை போல கண் மேல் பகுதியில் அப்ளை செய்ய வேண்டும். தங்கம், வெள்ளி, காப்பர், ரோஸ் கோல்டு போன்ற நிறங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதை மைல்ட் ஸ்மோக்கி ஐஸுடன் இணைத்தால் ஸ்டைலிஷ் லுக் கிடைக்கும். தங்கம் (Gold) – பார்ட்டி லுக்கிற்கு, ரோஸ் கோல்டு (Rose Gold) – மெல்லிய அழகு, வெள்ளி (Silver) – மாடர்ன், ஃப்யூச்சரிஸ்டிக் லுக்கிற்கு பயன்படுத்தலாம்.

3. பிஸ்டல் ஐலைனர் :

top 5 trending eye makeup looks to try right now

Pastel Eyeliner என்றழைக்கப்படும் இந்த ஐலைனர் லுக், பாரம்பரிய கருப்பு (Black Eyeliner) ஐ விட மிகவும் தனித்துவமான, புதுமையான வகையாக இருக்கிறது. கருப்பு ஐலனருக்கு பதிலாக, பிஸ்டல் நிறங்களான மஞ்சள், லைட் பிங்க், மின்ட் கிரீன், பிஸ்டல் ப்ளூ போன்றவற்றைப் பயன்படுத்தலாம். மெல்லிய Winged Eyeliner Look அல்லது Floating Eyeliner Look செம லுக்காக இருக்கும். மின்ட் கிரீன் – தினசரி மேக்அப்,
பிஸ்டல் ப்ளூ – புதிய அழகு, மஞ்சள் – தனித்துவம் ஆக இருக்கும். 

4. ஸ்மோக்கி காட் ஐஸ் : 

இது Smokey Eyes மற்றும் Cat Eyeliner ஆகிய இரண்டின் கலவையாக இருக்கும். இது தீவிரமான பார்வை கொடுத்து, பெரிதாகவும் கூர்மையானதாகவும் உங்கள் கண்களை காட்டும். 

பயன்படுத்தும் முறை :

மெல்லிய Cat Eyeliner வரைவதன் பிறகு, அதன் மீது ஸ்மோக்கி ஃபினிஷ் கொடுக்கலாம். இதற்கு கருப்பு, கிரே, டீப் ப்ரவுன், கூல்டோன் பர்பிள் போன்ற நிறங்கள் பயன்படுத்தலாம். நைட் பார்ட்டி, வீடியோ ஷூட், வைப்ரண்ட் மொமென்ட்ஸுக்கு இது சூப்பர் டிரெண்டியாக இருக்கும். கோல்டன்-பிளாக் – கிரேஸ்ஃபுல், டீப் பர்பிள் – ட்ரெண்டி, கருப்பு-சாம்பல் – மாஸ்குலின் பார்வை ஆகியவற்றிற்கு ஏற்றதாக இருக்கும். 

5. கிரிஸ்டல் ஐ மேக்கப் : 

இந்த ஆண்டு Crystal Eye Makeup மிகப்பெரிய அளவில் வைரலாகி உள்ளது. ரஹானா, டோஜா கேட், லேடி காகா போன்ற புகழ்பெற்ற பிரபலங்கள் இதை டிரெண்டாக்கியுள்ளனர்.

பயன்படுத்தும் முறை :

கண்களை Shimmer Eyeshadow கொண்டு அடிப்படை தயாரிக்க வேண்டும். அதன்பிறகு, சிறிய Crystal Stones அல்லது Rhinestones ஐ கண்களுக்குத் தகுந்த இடங்களில் ஒட்ட வேண்டும். இதை டிரமாட்டிக் ஐ லுக்குடன் சேர்த்தால் செம்ம கிளாமரான தோற்றம் கிடைக்கும். வெள்ளை கிரிஸ்டல் – மின்னும் பார்வை, ரோஸ் கோல்டு ஸ்டோன்ஸ் – மென்மையான அழகு, ப்ளூ அண்ட் பிங்க் கிரிஸ்டல்கள் – சினிமா ஸ்டைல் ஆகியவற்றிற்கு ஏற்றதாக இருக்கும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.