தெறிக்க விடும் ரசிகர்கள்... குட் பேட் அக்லி டீசர் வெளியீடு!
Dinamaalai March 01, 2025 12:48 AM


நடிகர் அஜித் குமாரின்  63வது படம்   'குட் பேட் அக்லி'.   ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்  உருவான இப்படத்தில்   அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உட்பட நட்சத்திர பட்டாளங்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். 

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது. தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இப்படம் சுமார் ரூ.270 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. சமீபத்தில் த்ரிஷாவின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியானது. இந்நிலையில் 'குட் பேட் அக்லி' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது குறித்த பதிவை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த டீசரை அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து  சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.