கட்டிய மனைவியைக் குதூகலமாக்க சூப்பர் டிப்ஸ் இதோ..!
Tamil Minutes March 01, 2025 03:48 AM

புதுப்பெண்ணிடம் புருஷனை முந்தானையில் முடிஞ்சிக்கோன்னு சொல்லிக்கொடுப்பாங்க. ஆனா ஆண்களுக்கு யாரும் சொல்லிக் கொடுப்பதில்லை. அதனால் மனைவியை எப்பவும் கலகலப்பாக வைக்க சில ஐடியாக்கள்…

நீங்கள் வேலைக்கு செல்பவர் என்றாலும் சரி, தொழில் செய்பவர் என்றாலும் சரி, 2-3 மணி நேரங்களை மனைவியுடன் மகிழ்ச்சியாக பேசுவதற்கு என்றே செலவிடுங்கள்.

வேலை முடிந்து களைப்பாக வீடு திரும்பினால் டி.வி.யும், ரிமோட்டுமாக இருந்து விடா தீர்கள். மனைவியை அருகே அழைத்து, அன்று வீட்டில் நடந்த விஷயங்களை பற்றிக் கேளுங்கள். அரட்டை அடித்துப் பேசுங்கள். இருவரும் ஒன்றாக டி.வி. பார்த்துக் கொண்டிருந்தால், அதில் வரும் கதாபாத்திரங்களிலேயே மூழ்கி விடாதீர்கள். பக்கத்தில் மனைவி இருக்கிறாள் என்பதை மனதில் வைத்துக்கொண்டு அவளிடமும் கலகலப்பாக பேசுங்கள்.

உங்கள் குடும்பத்துக்கு தேவையான நல்ல விஷயங்களை ஆரோக்கியமாக விவாதியுங்கள். இந்த விவாதத்தில் உங்கள் குடும்ப பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வு கிடைக்கலாம். பூக்கள் பிடிக்காத பெண்களே இருக்க முடியாது. அடிக்கடி அந்த பூக்களை உங்கள் அன்பான மனைவிக்கு வாங்கிக் கொடுத்து அசத்துங்கள்.

சம்பளம் பெறுவோர், சம்பளம் வாங்கிய நாள் அன்று மல்லிகைப்பூவுடன் மனைவிக்கு பிடித்த ஸ்வீட்டையும் வாங்கிக்கொண்டு கொடுத்தால் அவர்களது மனைவி அடை யும் ஆனந்தத்திற்கு அளவே இருக்காது. உங்கள் மனைவியை எப்போதும் காதலியாகவே நினைத்திருங்கள். ஒரு காதலன் காதலியிடம் எப்படி அன்பாக நடந்து கொள்வானோ, அதே போன்று நடந்து கொள்ளுங்கள். இல்லையென்றால், முயற்சியாவது செய்யுங்கள்.

உன்னுடைய ஆசைகள் எல்லாவற்றையும் நான் நிறைவேற்றி விட்டேனா? நிறைவேறாத ஆசைகள் இருந்தால் சொல். அதை நான் நிறைவேற்றுகிறேன்’ என்று அவ்வப்போது மனைவியிடம் சொல்லிப்பாருங்கள். நீங்கள் இப்படி கேட்ட மாத்திரத்திலேயே உள்ளம் குளிர்ந்து போவாள் உங்களவள்.

மனைவி கஷ்டப்பட்டு சில வேலைகளை செய்யும்போது, அதில் நீங்களும் பங்கெடுத்துப் பாருங்கள். அந்தநேரம், அவள் மனதிற்குள் ஆனந்த மழைச்சாரலே பொழியும். மொத்தத்தில், நீங்கள் மனைவியிடம் எந்த அளவுக்கு அன்பாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அவளும் உங்களிடம் அன்பாக இருப்பாள். நீங்கள் அவளிடம் ஒரு காதலனாய் பழகும்போது அவளும் உங்கள் காதலியாய் மாறிவிடுவாள்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.