“பட்ட பகலில் பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர்”.. 48 வினாடிகளில் 14 முறை பளார் பளார்… வைரலாகும் வீடியோ..!!
SeithiSolai Tamil March 01, 2025 03:48 AM

உத்திரபிரதேச மாநிலத்தில் கான்பூர் பெகன்கஞ்ச் சந்தையில் பெண் ஒருவர் பொருள்கள் வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு இளைஞர் திடீரென அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதனால் கோபமடைந்த அந்த புர்கா அணிந்த பெண் அந்த இளைஞரை பிடித்து அடித்து விலாசியுள்ளார். அந்தப் பெண் அந்த இளைஞரின் சட்டையை பிடித்து வெறும் 48 வினாடிகளில் 14 முறை கன்னத்தில் அறைந்துள்ளார்.

இதற்கிடையில் அந்த இளைஞர் அந்த பெண்ணிடம் தொடர்ந்து மன்னிப்பு கேட்டுள்ளார். இதனை சுற்றி இருந்தவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். மேலும் சிலர் அந்தப் பெண்ணிற்கு ஆதரவாக பேசினர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த விசாரணையில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞர் அதே பகுதியில் வசிக்கும் அத்னான் என்பவர் என தெரிய வந்தது. இவர் தொடர்ந்து சந்தையில் பொருட்கள் வாங்க வரும் பெண்களிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளார். இதுகுறித்து கான்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அத்னானை காவலில் வைத்துள்ளனர். குற்றவாளியின் குடும்பத்தினர் அத்னான் மனநிலை சரியில்லாதவர் எனவும் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

View this post on Instagram

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.