உருளைக்கிழங்கு சிப்ஸ் சுவையானதுதான். பலருக்கும் ஃபேவரைட். ஆனால் அதில் அதிக அளவிலான கொழுப்பு, உப்பு மற்றும் கலோரி இருக்கும். நீண்ட நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடையும் அதிகரிக்கும், சுகாதார சிக்கல்களும் உருவாகலாம். அதற்காக சிப்ஸ் சாப்பிடுவதை விட்டு விட முடியாதவர்கள், கவலைப்பட வேண்டாம். உருளைக்கிழங்கு சிப்ஸ்க்கு பதிலாக ஆரோக்கியமான, குறைந்த கலோரி உள்ள, ஆனால் அதே சுவையை தரக்கூடிய 9 சிறந்த மாற்று உணவுகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
1. பக்கோய் சிப்ஸ் (Baked Kale Chips):
கேல் என்பது நரம்பு பலம், ஜீரண சக்தி, மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரு சூப்பர் ஃபுட். இதனை எண்ணெயில் பொரிக்காமல், ஓவெனில் வேக வைத்து சிப்ஸ் போல சாப்பிடலாம்.
செய்முறை:
துணியில் Kale இலைகளை துடைத்து, நன்றாக உலர்த்தவும்.
லேசாக Olive Oil, கருப்பு மிளகு தூள், உப்பு சேர்த்து கிணறவும்.
180°C வரை Preheated Oven-ல் 10-15 நிமிடம் பொன்னிறமாகும் வரை வேக வைத்து சாப்பிடலாம்
2. பூசணிக்காய் தாள் சிப்ஸ் :
பூசணிக்காய், வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்தது. இது சரும ஆரோக்கியத்துக்கும் கண் பார்வைக்கும் உதவும். இதில் சிப்ஸ் செய்து சாப்பிடுவது வித்தியாசமான சுவையில் இருக்கும்.
செய்முறை:
பூசணிக்காயை மெல்லிய துண்டுகளாக வெட்டி, Air Fryer அல்லது ஓவெனில் bake செய்யலாம்.
உப்பு, Paprika Powder, சிறிது கருப்பு மிளகு தூள் சேர்க்கலாம்.
3. வெண்டைக்காய் சிப்ஸ் :
வெண்டைக்காயில் அதிகமான நார்ச்சத்து உள்ளதால், ஜீரணத்தை பாதுகாக்கும்.
செய்முறை:
வெண்டைக்காயை மெல்லிய துண்டுகளாக வெட்டி, அதில் சிறிது கடலை மாவு மற்றும் மிளகாய்த் தூள் சேர்த்து Air Fry செய்து சாப்பிடலாம்.
4. பீட்ரூட் சிப்ஸ் :
பீட்ரூட் இரத்த சுத்திகரிப்பு மற்றும் ஹீமோகுஏளாபின் அதிகரிக்க சிறந்தது.
செய்முறை:
பீட்ரூட்டை மெல்லிய துண்டுகளாக வெட்டி, லேசாக Olive Oil தடவி, ஓவெனில் வேகவைக்கவும்.
சிறிதளவு Rosemary தூவி பரிமாறலாம்.
5. முருங்கைக்காய் சிப்ஸ் :
முருங்கை இலைகளில் அதிக அளவிலான வைட்டமின்கள், கால்சியம், மற்றும் இரும்புச்சத்து இருக்கின்றன.
செய்முறை:
முருங்கை இலைகளை மெல்லியதாக வெட்டி, பூண்டு பொடி, உப்பு, மற்றும் சிறிது Olive Oil சேர்த்து bake செய்யலாம்.
6. பரங்கிக்காய் விதை சிப்ஸ் :
பரங்கிக்காய் விதைகள் ஒமேகா-3 கொழுப்புச்சத்து மற்றும் புரதம் நிறைந்தவை.
செய்முறை:
விதைகளை உப்பு, சீரகப் பொடி, மிளகாய் தூள் சேர்த்து Air Fryer-ல் 8-10 நிமிடங்கள் வறுக்கவும்.
7. குடைமிளகாய் சிப்ஸ் :
அதிக வைட்டமின் சி உள்ள Bell Peppers மொறு மொறு இருக்கும்.
செய்முறை:
குடைமிளகாயை மெல்லிய துண்டுகளாக வெட்டி, Parmesan Cheese மற்றும் Olive Oil தடவி ஓவெனில் bake செய்யலாம்.
8. சர்க்கரைவல்லிக் கிழங்கு சிப்ஸ் :
உருளைக்கிழங்கு போல் தான், ஆனால் இது Low Glycemic Index கொண்டது. அதனால் சர்க்கரையை விரைவில் அதிகரிக்காது.
செய்முறை:
மெல்லிய துண்டுகளாக வெட்டி, தேங்காய் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து Air Fry செய்யலாம்.
சிறிதளவு Honey Drizzle செய்தால் சுவை அதிகரிக்கும்.
9. பச்சை பயறு சிப்ஸ்
பச்சை பயற்றில் அதிக புரதம் மற்றும் நார்ச்சத்து இருப்பதால் ஆரோக்கியமான ஸ்நாக் ஆகும்.
செய்முறை:
இரவு முழுவதும் ஊறவைத்த பச்சை பயறை உலர வைத்து, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து Air Fryer-ல் வேகவைக்கலாம்.