மாநிலம் முழுவதும் அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் தாய்மொழி கட்டாயம்... உடனடி அமல்!
Dinamaalai March 01, 2025 01:48 AM


 
தெலுங்கானா மாநிலத்தில் தாய்மொழி கட்டாயம் என்பதை உணர்த்தும் வகையில்  2018 ம் ஆண்டு தெலுங்கு மொழி பாடம் கட்டாய சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதனை அம்மாநில அரசு நடைமுறைப்படுத்தவில்லை.  தற்போதைய ஆளும் காங்கிரஸ் அரசு அனைத்து பள்ளிகளிலும் தெலுங்கு மொழியை கட்டாயமாக்க நடவடிக்கை எடுத்துள்ளது.


இதன்படி அனைத்து அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், சிபிஎஸ்சி, ஐசிஎஸ்இ, ஐபி மற்றும் பிற வாரிய இணைப்பு பள்ளிகளில் தெலுங்கு மொழியை கற்பிக்க முடிவு செய்திருப்பதாக  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி  வரும் கல்வி ஆண்டு முதல் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள கூட்ட ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து  அரசு வெளியிட்ட அறிக்கையில் 2025- 26ம் ஆண்டுக்கான கல்வியாண்டில் தெலுங்கானா மாநிலத்தில் செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் 1 முதல் 10 ம் வகுப்பு வரை தெலுங்கு மொழி கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.