உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் தனியாருக்கு சொந்தமான திருமண மண்டபம் செயல்பட்டு வருகிறது. பிப்ரவரி 21ம் தேதி அந்த மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக தடபுடலாக பிரமாதமான உணவுகள் தயாரிக்கப்பட்டு விருந்து பரிமாறப்பட்டது.
இந்நிலையில் சமையல்காரர் ஒருவர் சப்பாத்தி மாவில் எச்சில் துப்பி சமைத்ததை கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
மேலும் இச்சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சப்பாத்தி மாவில் எச்சில் துப்பி சமைத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். அந்த நபரின் பெயர், ஊர் குறித்த தகவல்களை வெளியிடவில்லை.