தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக வீடு மற்றும் மனைகளுக்கான ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு பட்டா மற்றும் கிரைய பத்திரம் வழங்கப்படுகிறது. இதற்காக சிறப்பு முகாம்கள் நடைபெறும் நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது. அதன்படி கடந்த 24ஆம் தேதி சிறப்பு முகாம் தொடங்கிய நிலையில் இன்று நிறைவடைகிறது.
இந்த முகாம் சென்னை முழுவதும் நடைபெறும் நிலையில் ஒவ்வொரு தேதியும் சில குறிப்பிட்ட பகுதிகளில் பட்டா மற்றும் கிரைய பத்திரம் வழங்கப்பட்டது. அந்த வகையில் இன்று சென்னையில் தி நகர், சைதாப்பேட்டை, மயிலாப்பூர், அண்ணா நகர், பெரம்பூர் மற்றும் மாதவரம் ஆகிய பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. மேலும் இன்று கடைசி நாள் என்பதால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.